5093 -- Prajothpaththi


5093 ப்ரஜோத்பத்தி வருடம்

5093 - ஆடி – 1991 5093 - மார்கழி – 1991 5093 - தை– 1992 5093 - மாசி – 1992 5093 - பங்குனி் – 1992

*************************************************************************

5093 - ஆடி – 1991

************************************************************************* சுபாஷிதம் - 1 ஸதா ப்ரவாஸி நிரோஹி பத்ரவேஷ ஷூசிஸ்மிதஹ ஹிதகாரி மிதாஹாரி பவேத் சங்க பராயணஹ --- சங்க கீதை பொருள் சங்கமொன்றே சிந்தையாகக் கொண்ட சிறந்த கார்யகர்த்தர்கள் எப்போதும் தமது பணிக்களத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருப்பர். ஆரோக்கியமானவர்களாகவும், நேர்த்தியான உடையணிந்தவர்களாகவும் இருப்பர். சுத்தமாகவும் சிரித்த முகத்தோடும் காணப்படுவர். எப்போதும் நல்லதையே செய்து கொண்டிருப்பர், மிதமான உணவை உட்கொள்வர் சுபாஷிதம் - 2 வேதமுடைய திந்த நாடு – நல்ல வீரர் பிறந்ததிந்த நாடு சேதமில்லா ஹிந்துஸ்தானம் – இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா மகாகவி பாரதியார் 5093 ப்ரஜோத்பத்தி வருடம் ******************************************************************************** h3>5093 - மார்கழி – 1991 *********************************************************************************** சுபாஷிதம் - 1 அனித்யாநி ஷரீராணி விபவோ நைவ ஷாஸ்வதஹ நித்யம் ஸந்நிஹிதோ ம்ருத்யுஹு கர்தவ்யோ தர்மஸங்க்ரஹஹ பொருள்: உடம்பு நிலையானது அல்ல,, அதிலும் செல்வம் நிலையானது அல்ல, சாவு எப்பொழுதும் அருகிலேயே இருப்பதால் எப்பொழுதும் தர்மத்தைக் கடைப்பிடிப்பதே கடமை. சுபாஷிதம் - 2 வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு வாழும் மனிதர்க் கெல்லாம் பயிற்றி பலகல்வி தந்து – இந்தப் பாரினை உயர்த்திட வேண்டும் ---- சுப்ரமண்ய பாரதியார் 5093 ப்ரஜோத்பத்தி வருடம் ******************************************************************************** h3>5093 - தை– 1992 ************************************************************************* சுபாஷிதம் - 1 நாத்மான மவன்யேத பூர்வாபிரஸம்ருத்திபிஹி ஆ ம்ருத்யோஷ் ஷ்ரியமன்விச்சேத் நைனாம் மன்யேத் துர்லபாம் ----மனுஸ்ம்ருதி பொருள்: முந்தைய தோல்விகளின் காரணமாகத் தன்னைத் தானே ஈனமாக நினைத்துக் கொள்ளக் கூடாது. மாறாக வாழ்க்கை முழுவதும் நல்ல நிலை அடைய முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். முடியாது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது சுபாஷிதம் - 2 தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துயர்ந்தோர் தம்மை மதியார் தமையடைந்தோர் – தம்மின் இழியினும் செல்வர் இடர் தீர்ப்பர் அல்கு கழியினும் செல்லாதோ கடல் ---- நன்னெறி 5093 ப்ரஜோத்பத்தி வருடம் ******************************************************************************** h3>5093 - மாசி – 1992 ******************************************************************************** சுபாஷிதம் - 1 உத்யமே நாஸ்தி தாரித்ரியம் ஜபதோ நாஸ்தி பாதகம் மெளனேன கலஹோ நாஸ்தி நாஸ்தி ஜாக்ரதோ பயம் பொருள் உடலுழைப்பு இருப்பின் ஏழ்மை என்றும் நெருங்காது. நாமஜபம் செய்வோரிடம் பாவம் அண்டாது. மெளனமாய் இருந்தால் கலகம் ஏற்படாது. அதுபோல விழிப்புடன் இருப்பவனுக்கு பயம் இல்லை சுபாஷிதம் 2 கற்பிளவோ டொப்பர் கயவர்; கடுஞ்சினத்தின் பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே – விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப் போல மாறுமே சீ ரொழுகு சான்றோர் சினம் பொருள்: ஒழுக்கமற்றவர்களுக்கு கோபம் வரும் பொழுது கல் பிளந்ததைப் போல இருப்பார்கள் [கல் பிளந்தால் மீண்டும் ஒட்டாது] சிறந்த ஒழுக்கமுடையவர்கள் கோபம் அடையும் போது பொன் பிளந்த்தைப் போல இருப்பார்கள். [பொன்னைப் பிளந்தாலும் மீண்டும் ஒட்டும்]. வில்லிலிருந்து நதியில் பாயும் அம்பினால் நீரில் உண்டாக்கும் வடு உடனடியாக மறைந்து விடுவதுபோல சான்றோரின் கோபம் சீக்கிரம் மறைந்து விடும். 5093 ப்ரஜோத்பத்தி வருடம் ******************************************************************************** h3>5093 - பங்குனி் – 1992 ************************************************************************* சுபாஷிதம் - 1 அர்த்தஸித்தி பராமிச்சன் தர்மமேவாதிதஷ்சரேத் நஹி தர்மாதபைத்யர்தஹ ஸ்வர்கலோகாதிவாம்ருதம் ----விதுர நீதி பொருள்: எவனெருவன் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை கொண்டு இருக்கிறானோ அவன் முதலில் தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும். ஸ்வர்கத்தை விட்டு அமுதம் பிரிந்து போவது இல்லை. அது போல தர்மத்தினின்று செல்வம் பிரிந்து போவது இல்லை. சுபாஷிதம் - 2 பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் மறவாமே நோற்ப தொன்றுண்டு; பிறர் பிறர் சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்து யார் யார்க்குந் தாழ்ச்சி சொலல் பொருள்: மக்களால் போற்றப்படும் வாழ்க்கை வேண்டுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு பழக்கம். பிறரது நல்ல குணங்களை அனைவருக்கும் தெரிய எடுத்துக் கூறுதல். பிறரது குறைகளை வெளியே சொல்லாமல் இருத்தல். 5093 ப்ரஜோத்பத்தி வருடம் ********************************************************************************