5114 -- Nandhana

5114 நந்தன வருடம்

5114 - ஆனி – 2012 5114 - ஆடி – 2012 5114 - ஆவணி – 2012 5114 - புரட்டாசி – 2012 5114 - ஐப்பசி – 2012 5114 - கார்த்திகை – 2012

*************************************************************************

5114 - ஆனி – 2012

************************************************************************* சுபாஷிதம் 1 உபார்ஜிதானாம் வித்தானாம் த்யாக ஏவ ஹி ரக்ஷணம் த்டாகோதர – ஸம்ஸ்தானாம் பரீவாஹ இவாம்பஸாம்ல் பொருள்: ஒருவர் சேர்த்த செல்வத்தை நல்ல பணிகளுக்காக செலவிடுவதே, செல்வத்தைப் பாதுகாக்க சிறந்த வழியாகும். ஏரியில் அதிகப்படியான நீர் வெளியேற உதவும் கால்வாய் இருப்பதால் அல்லவா ஏரி உடையாமல் இருக்கிறது. சுபாஷிதம் 2 ஆறுஇடும் மேடும் மடுவும் ஆம்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் – சோறு இடும்; தண்ணீரும் வாரும் தரும்மே சார்புஆக, உள்நீர்மை வீறும், உயர்ந்து --- நல்வழியில் ஒளவையார் பொருள்: ஆற்றில் தண்ணீர் ஓடும் வேகத்திற்கு ஏற்ப மேடுகளும் பள்ளங்களும் மாறி மாறி அமையும். அதைப்போல், செல்வமும் ஒருவரிடம் நிலைத்து இருப்பது இல்லை. ஒருவரிடம் மிகுதியாக செல்வம் சேரும். வேறு ஒருவரிடம் குறைவாகச் செல்வம் சேரும். அதுவும் நிலையாக இருப்பதில்லை. எனவே, செல்வம் இருக்கின்ற போதே அந்தச் செல்வத்தைப் பயன்படுத்தி உணவளித்தல், தண்ணீர் பந்தல் அமைத்தல் முதலிய அறச் செயல்கள் செய்ய வேண்டும். இவ்வாறு அறசெயல்களைச் செய்தால் நமது உள்ளம் மகிழ்ச்சி அடையும். 5114 நந்தன வருடம் ********************************************************************************

5114 - ஆடி – 2012

******************************************************************************* சுபாஷிதம் 1 தனதான்ய ஸீஸம்பன்னம் ஸ்வர்ணரத்னாதி ஸம்பவம் | ஸீஸம்ஹதிம் வினா ராஷ்ற்றம் ஸதாஸ்யாத் சூன்யவைபவம் || பொருள்: தனம் தான்யம் நிறைந்த போதிலும், தங்கம் ரத்னம் இவைகள் குவிந்திருந்த போதிலும் உறுதியான ஒருங்கிணைப்பு இல்லாத நாடு(எப்பொழுதும்) எதுவும் இல்லாதது போலாகிவிடும் சுபாஷிதம் 2 ஏழை யென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில் இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே வாழி கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர்யாரும் ஒருநிகர் சமானமாக வாழ்வமே ------ பாரதியார் 5114 நந்தன வருடம்் *************************************************************************

5114 - ஆவணி – 2012

******************************************************************************* சுபாஷிதம் 1 விஸ்மய: ஸ்ர்வதா ஹேய: ப்ரத்யூஹ்: ஸர்வகர்மணாம் தஸ்மாத் விஸ்மயமுத்ஸ்ருஜ்ய ஸாத்யே ஸித்திர் விதீயதாம் பொருள்: எதைக் கண்டும் மலைத்துப் போகக்கூடாது. அது நமது பணிகளுக்கு மிகப்பெரும் தடையாகும். ஆகையால் எதனைக் கண்டும் மலைத்துப் போகாமல், அடைய வேண்டிய குறிக்கோளை நோக்கி முழுமுயற்சி செய்ய வேண்டும். சுபாஷிதம் 2 நயனுடையான் நல்கூர்ந்தா நாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு திருக்குறள் பொருள்: ஒப்புரவாளன், பொதுநலன் ஆற்றதலாசிய கடமைகள் தான் செய்ய முடியாமை பற்றியே வருந்துவான். தான் எதிர்பர்த்த என்பன் அடையமுடியவில்லையே என்று ஒரு போதும் சுயநலத்தோடு வருந்தமாட்டான் 5114 நந்தன வருடம்் *************************************************************************

5114 - புரட்டாசி – 2012

******************************************************************************* சுபாஷிதம் 1 ஷட் தோஷாஹா புருஷேணேஹ ஹாதவ்யா பூதிமிச்சதா | நித்ராம் தந்த்ரா, பயம், க்ரோத, ஆலஸ்யம் தீர்க்க சூத்ரதா || பொருள்: வெற்றி பெற விருப்பமுள்ளவர்கள், அதிகமாகத் தூங்குதல், பாதி தூக்கம்-பாதி விழித்திருத்தல், பயம், கோபம், சோம்பல், வேலையைத் தள்ளிப் போடுதல் அல்லது மெதுவாகச் செய்தல் ஆகிய ஆறு குறைகளை விட்டுவிட வேண்டும் சுபாஷிதம் 2 எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும் இந்திய மக்கள். எல்லோரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர் – நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் எல்லோரும் இந்நாட்டு மன்னர் --- பாரதியார் 5114 நந்தன வருடம்் *************************************************************************

5114 - ஐப்பசி – 2012

****************************************************************************** சுபாஷிதம் 1 நாத்மானம் அவமன்யேத பூர்வாபி ரஸ்ம்ருத்திபி: ஆ-ம்ருத்யோ: ஸ்ரீயம் அன்விச்சேத் நைனாம் மயேத துர்பலம் பொருள்: கடந்த காலத் தொல்விகளை எண்ணி ஒருவர் தன்னைத்தானே இகழ்ந்து கொள்ளக்கூடாது. வெற்றி ஒன்றும் எட்டாக் கனி அல்ல என்ற எண்ணத்துடன் உயிருள்ளவரை முயற்சி செய்ய வேண்டும் சுபாஷிதம் 2 வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் திருக்குறள் அரசன் போரிடச் செல்வதற்கு முன்பே அப்போருக்கு வேண்டிய திறன்களையும், தனது ஆற்றலையும், எதிரியின் ஆற்றலையும், தனக்கும் எதிரிக்கும் துணையாக நிற்பவரின் ஆற்றல்களையும் ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் தன்னை தயார்படுத்திக் கொண்டபின் போரிட வேண்டும். 5114 நந்தன வருடம்் *************************************************************************

5114 - கார்த்திகை – 2012

******************************************************************************* சுபாஷிதம் 1 அலப்தம் சைவ லிப்ஸேத லப்தம் ரக்ஷேதவேக்ஷயா ரக்ஷிதம் வர்த்தயேத் ஸம்யக் வ்ருத்தம் தீர்தேஷு நிக்ஷிபேத் பொருள்: இது வரை அடையாத்தனை (திறமை, செல்வம்) அடைய விரும்ப வேண்டும். அடைந்ததனைப் பொறுப்பாகப் பாதுகாக்க வேண்டும். பாதுகாத்ததனை மேலும் வளர்த்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு நன்கு வளர்ந்ததனை (திறமை, செல்வம்) நற்பணிகளுக்காகச் செலவிட வேண்டும் சுபாஷிதம் 2 வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு! பாரத பூமி பழம்பெரும் பூமி; நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்! --- பாரதியார் 5114 நந்தன வருடம்் *************************************************************************