5116 -- Jaya


5116 ஜய வருடம்

5116 - ஆனி – 2014

*************************************************************************

5116 - ஆனி – 2014

************************************************************************* சுபாஷிதம் 1 த நானி ஜீவிதம் சைவ பரார்த்தே ப்ரஜ்ஞ உத்ஸ்ருஜேத் ஸந்நிமித்தம் வரம் த்யாகஹ விநாசே நியதே ஸதி. பொருள்: பணம் வாழ்க்கை ஆகியவைகளை பிறருக்காகத் தியாகம் செய்வது சிறந்தது ஆகும். அழியும் தன்மை கொண்ட இவ்விரண்டும் நல்ல செயலுக்காக பயன்படட்டுமே சுபாஷிதம் 2 இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் எம்மை யுலகத்தும் யாம் காணோம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து --- நாலடியார் பொருள்: கல்வி இப்பிறவியின் பயனை அளிக்கும். மற்றவர்க்கு அளிப்பதால் குறைவதில்லை. கற்ற தம்மை அறிவால் விளங்கச் செய்யும் அதனால் எந்த கெடுதலும் இல்லை எனவே எவ்வுலகத்திலும் கல்வியைப் போல அறியாமையான நோயைப் போக்கும் மருந்து எதுவுமில்லை 5116 ஜய வருடம் ********************************************************************************