5099 -- Eswara

5099 ஈஸ்வர வருடம்

5099 - சித்திரை – 1997 5099 - வைகாசி – 1997 5099 - ஆனி – 1997 5099 - ஆடி – 1997 5099 - ஆவணி – 1997 5099 - புரட்டாசி – 1997 5099 - ஐப்பசி – 1997 5099 - கார்த்திகை – 1997 5099 - மார்கழி – 1997 5099 - தை – 1998 5099 - மாசி – 1998 5099 - பங்குனி – 1998

*************************************************************************

5099 - சித்திரை – 1997

************************************************************************* சுபாஷிதம் 1 நல்ல குலமென்றும் தீய குலமென்றும் சொல்லளவு அல்லால் பொருளில்லை – தொல்சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை என்றிவற்றான் ஆகும் குலம் ---- நாலடியார் பொருள்: நல்ல குலமென்றும் தீய குலமென்றும் சொல்லும் வார்த்தைகளுக்கு ஆழமான பொருளில்லை தொன்றுதொட்டு வரும் சிறப்புடைய ஒளியைத் தரும் பொருளாகிய தவம் கல்வி மற்றும் முயற்சி ஆகியவற்றால்தான் குலத்திற்கு சிறப்புண்டாகும் சுபாஷிதம் 2 சத்யம் மாதா பிதா ஞானம் தர்மோ ப்ராத தயா சகா சாந்திஹ் பத்னீ க்ஷமா புத்ரஹ ஷடேதே மம பாந்தவஹ பொருள்: சத்யமே தாய்; ஞானமே தந்தை; தர்மமே சகோதரன்; கருணையே நண்பன்; அமைதியே மனைவி; மன்னிப்பே மகன் என்று எனக்கு இவர்களே ஆறு உறவினர்கள். 5099 ஈஸ்வர வருடம்் ********************************************************************************

5099 - வைகாசி – 1997

************************************************************************* சுபாஷிதம் 1 அன்று அறிவாம் என்னாது அறம்செய்க மற்று அது பொன்றுங்கால் பொன்றாத் துணை பொருள்: பிறகு செய்து கொள்ளலாம் என்று கருதாது இளமையிலேயே செய்கின்ற அறம் உயிர் போகும் காலத்தில் அதற்கு அழிவில்லாத் துணையாகும் சுபாஷிதம் 2 வித்யா மித்ரம் ப்ரவாஸேஷு மாதா மித்ரம் க்ருஹேஷுச ரோகினம் ஒளஷதம் மித்ரம் தர்மோ மித்ரம் ம்ருதஸ்யச பொருள்: பயணம் செய்பவனுக்கு கல்வி நண்பன். வீட்டில் தாய் நண்பன், நோயாளிக்கு மருந்தே நண்பன். தர்மம் இறந்த பின்னும் நண்பனாயிருக்கும் 5099 ஈஸ்வர வருடம் ********************************************************************************

5099 - ஆனி – 1997

************************************************************************* சுபாஷிதம் 1 சாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்ந்த மதி கல்வி – அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் ---- பாரதியின் பாப்பா பாட்டு சுபாஷிதம் 2 அயம் மே ஹஸ்த்தோ பகவன் அயம் மே பகவத்தரஹ அயம் மே விஸ்வ பேஷஜஹ அயம் மே ஷிவாபிமர்ஷனஹ பொருள்: இந்த எனது கை இறைவனாகும். இது அதிக இறைமையுடையது. இந்த எனது கை உலக மருத்துவன் (அனைவர்து நோயையும் போக்கும்) இந்த எனது கை நனை விளைவிக்கும் தன்மையுடையது. 5099 ஈஸ்வர வருடம் ********************************************************************************

5099 - ஆடி – 1997

************************************************************************* சுபாஷிதம் 1 நாமிருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம் – இது நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் – இந்தப் பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம் – பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம் ----- பாரதியின் சுதந்திரப் பள்ளு சுபாஷிதம் 2 ஸங்க ச்சத்வம் ஸம்வதத்வம் ஸம்வோ மனாம்ஸி ஜானதாம் | தேவா பாகம் யதா பூர்வே ஸ்ஞ்ஜானானா உபாஸதே ரிக்வேதம் பொருள்: நீங்கள் ஒருவருக்கொருவர் இணைந்து செல்லுங்கள். ஒன்று கூடி அன்புடன் அள்வளாவுங்கள் (பேசுங்கள்). உங்கள் மங்கள் ஒத்த கருத்துடையனவாகி மீயறிவைத் தேடட்டும். முற்காலத்தில் சான்றோர்கள் ஒன்றாகச் சேர்ந்து யாகங்களைச் செய்து தேவர்களை வழிபட்டது போலவே நீங்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடையவராகுங்கள். 5099 ஈஸ்வர வருடம் ********************************************************************************

5099 - ஆவணி – 1997

************************************************************************* சுபாஷிதம் 1 வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே ஒல்லுந் துணையும் ஒன்று உய்ப்பன் பொறை இனிதே இல்லது காமுற் றிரங்கி இடர்ப்படார் செய்வது செய்தல் இனிது ----- இனியவை நாற்பது பொருள்: முன்னேற்றத்தை விரும்பு கோபபபடாதவனவது தவம் இனிமையானது. கூடியவரையும் எடுத்துக்கொண்டதொரு கருமத்தை நடத்துவோனது ஆற்றல் இனிமையானது. இல்லாததொரு பொருளை விரும்பி, மனம் ஏங்கி துன்பப்படாதவராய், (உள்ளது கொண்டு) செய்யத்தக்கதொரு கருமத்தை செய்வது இனிமையானது. சுபாஷிதம் 2 யாந்தி ந்யாய ப்ரவ்ருத்தஸ்ய திர்யஞ்சோ (அ)பி ஸஹாயதாம் | ஆ பந்தானாந்து கச்சந்தம் ஸோதரோ (அ)பி வுமுஞ்சதி || --- அனார்கராகவ 5099 ஈஸ்வர வருடம் ********************************************************************************

5099 - புரட்டாசி – 1997

************************************************************************* சுபாஷிதம் 1 சென்றதினி மீளாது மூட ரேநீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் விழ்ந்து குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டாம் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடி இன்புற்றிருந்து வாழ்வீர்; தீமையெலாம் அழிந்துபோம் திரும்பி வாரா. --- பாரதியார் சுபாஷிதம் 2 அனாகத விதா தாச ப்ரத்யுத் பன்ன மதிஸ்ததா த்வாவைதௌ ஸூகமேதேதே யத்பவிஷ்யோ வினஷ்யதி ---- சாணக்ய நீதி சாஸ்திரம் பொருள்: நிகழ் காலத்தில் விழிப்புடனிருப்பவனும், எதிர்கலத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்பவனும் வெற்றி பெறுவான். நடக்க வேண்டியது தான் நடக்கும் என்பவன் தோல்வியுறுவான். 5099 ஈஸ்வர வருடம் ********************************************************************************

5099 - ஐப்பசி – 1997

************************************************************************* சுபாஷிதம் 1 பக்கத் திருப்பவர் துன்பம் – தனைப் பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி ஒக்கத் திருந்தி உலகோர் – நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி ---- எங்கள் மதம் -- பாரதியார் கவிதைகள் சுபாஷிதம் 2 குணாஹ ஸ்ர்வத்ர பூஜ்யந்தே நமஹத்யோபி ஸம்பதஹ பூர்னேந்து கிம் ததா வந்த்யோ நிஷ்கங்கோ யதா க்ருன்ஷஹ ----- சாணக்ய நீதி சாஸ்திரம் பொருள்: செல்வம் எவ்வளவு இருந்தாலும் நல்ல குணம் தான் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறது. முழுநிலவைக்கூட மாசற்ற, சிறிய வளர்பிறையின் இரண்டாம் நாள் சந்திரனே மதிக்கப்படுகிறது. (அடுத்த நாளே சுப நாளாக கருதப்படுகிறது) 5099 ஈஸ்வர வருடம் ********************************************************************************

5099 - கார்த்திகை – 1997

************************************************************************* சுபாஷிதம் 1 எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு திருக்குறள் (467) சுபாஷிதம் 2 உத்பன்ன பஷ்சாதாபஸ்ய புத்திர் பவதி யாத்ருஷீ தாத்ருஷீ யதி பூர்வம் ஸ்யாத் கஸ்ய ந ஸ்யான்மஹோதயஹ சாணக்ய நீதி சாஸ்திரம் ஒரு செயலை செய்து முடித்த பின் வருந்துவதை விட செயலை செய்யும் முன் சிந்திப்பவன் நிச்சயம் வெற்றி பெறுவான் 5099 ஈஸ்வர வருடம் ********************************************************************************

5099 - மார்கழி – 1997

************************************************************************* சுபாஷிதம் 1 பொருள்: சுபாஷிதம் 2 பொருள்: 5099 ஈஸ்வர வருடம் ********************************************************************************

5099 - தை – 1998

************************************************************************* சுபாஷிதம் 1 ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை ---- முது மொழிக் காஞ்சி பாடல் பொருள்: கடலால் சூழப்பட்ட இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும், நல்ல நூலகளைப் படிப்பதை விட நல்ல ஒழுக்கம் உடையவராய் இருத்தல் சிறந்ததாகும் (மதுரை கூடலூர் கிழார் எழுதிய இந்நூல் பதினெண் கீழ் கணக்கு நூலகளுள் ஒன்று) சுபாஷிதம் 2 சாஸ்த்ராண்ய திதியாபி பவந்தி மூர்கா| யஸ்து க்ரியா வான்புருஷ: ஸ வித்வான் || பொருள்: பல நூல்களைக் கற்ற போதிலும் ஒருவன் மூடனாக இருக்க முடியும் என்வன் தான் கற்றதை செயலில் வெளிப்படுத்துகின்றானோ அவனே வித்வான் ஆகிறான் 5099 ஈஸ்வர வருடம் ********************************************************************************

5099 - மாசி – 1998

************************************************************************* சுபாஷிதம் 1 சாவது எளிது அரிது சான்றாண்மை நல்லது மேவல் எளிது அரிது மெய்போற்றல் – ஆவதன் கண் சேரல் எளிது நிலையரிது தெள்ளியராய் வேறல் அரிது சொல் ---- ஏலாதி பாடல் – 39 பொருள்: உயிர்விடுதல் என்பது எளிதாகும். கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுக்குதல் அரிதாகும். இல்லற வாழ்க்கையை அடைதல் எளிதாகும். ஆனால், அதில் நின்று பற்றற்ற ஒழுக்கத்தைப் போற்றுதல் அரிதாகும். துறவறத்தில் செல்வது எளிதாகும் ஆனால் அதில் நிலையாய் முடிவு வரை நிற்றல் அரிதாகும். எதனையும் சொல்வது எளிதாகும் ஆனால் தெளிந்த அறிவுடையவராய் அதனைச் செய்தல் அரிதாகும். அகர்தவ்யம் ந கர்தவ்யம் ப்ரானை கண்டகதைரபி லர்ட்ஜவ்ய மேவ கர்தவ்யம் ப்ரானை கண்டகதைரபி --- சாணக்ய சரசம்கிரஹ பொருள்: எந்தச் செயல் தவறானதோ மரண்மே வந்தாலும் அந்த செயலை செய்யக் கூடாது. எந்தச் செயல் சரியானதோ அதை மரணமே வந்தாலும் செய்து முடிக்க வேண்டும் 5099 ஈஸ்வர வருடம் ********************************************************************************

5099 - பங்குனி – 1998

************************************************************************* சுபாஷிதம் 1 அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃது உண்டேல் தவா அதுமேன் மேலும் வரும் திருக்குறள் (368) பொருள்: ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால் எல்லாத் துன்பங்களும் முடிவில்லாமல் இடைவிடாமல் வரும். சுபாஷிதம் 2 அனாத்த்யந்தா து ஸா த்ருஷ்ணா அந்தர் தேஹ கதா ந்ருணாம் வினாஷயதி ஸம்பூதா அயோனிஜ இவானலஹ | ----- மஹாபாரதம் பொருள்: ஆரம்பமும், முடிவும் இல்லாத – தன்னுள்ளேயே இருக்க கூடிய -- பேராசையானது, சுயமாக வளர்ந்து அழிக்கக் கூடிய தியைப் போன்று மனிதனை அழித்து விடும் 5099 ஈஸ்வர வருடம் ********************************************************************************