5101 பிரமாதி வருடம்
5101 - சித்திரை – 1999 5101 - வைகாசி – 1999 5101 - ஆனி – 1999 5101 - ஆடி – 1999 5101 - ஆவணி – 1999
************************************************************************* 5101 - சித்திரை – 1999
************************************************************************* சுபாஷிதம் 1 விரைந்துரையார் மேன்மேல் உரையார் பொய்யாய பரந்துரையார் பாரித்துரையார் ஒருங்கனைத்தும் சில் எழுத்தினாலே பொருள் அடங்கக் காலத்தால் சொல்லுக செவ்வி அறிந்து ----- ஆசாரக்கோவை பொருள்: ஒருவரிடம் ஒன்றைச் சொல்லுகிற போது வேகமாகப் பேச மாட்டார். சொன்னவற்றையே மேலும் மேலும் சொல்லிக் கொண்டிருக்கமாட்டார். பொய்யான செய்திகளை கோடிட்டுக் காட்டாமல் விளக்கிக் கொண்டிருக்க மாட்டார். விரிவாக நீண்ட நேரம் பேச மாட்டார். சொல்ல வேண்டியவற்றை எல்லாம் சில சொற்றொடர்களிலே, கேட்பவர் விளங்கிக் கொள்ளும் வகையில் காலமும் இடமும் அறிந்து கவனமாகப் பேச வேண்டும் சுபாஷிதம் 2 அஹமஸ்மி ஸஹமான் உத்தரோனாம் பூப்யாம் அமீஷாமஸ்மி விஸ்வாஷா மாஷா விஷாஸஹி அதர்வண வேதம் பொருள்: எனது தாய்நாட்டிற்காக, அதன் பாதுகாப்புக்காக எல்லா விதமான இன்னல்களையும் ஏற்க நான் ஆயத்தமாயுள்ளேன். எந்த திசையிலிருந்து எந்த நேரத்தில் அந்த இன்னல் ஏற்படுமாயினும் சரி 5101 பிரமாதி வருடம் ********************************************************************************5101 - வைகாசி – 1999
************************************************************************* சுபாஷிதம் 1 குலத்தினும் செயலிலும் அனைத்திலும் இக்கணந்தொட்டு நீர் யவிரும் ஒன்றே பிரிவுகள் துடைப்பீர் பிரிதலே சாதல் ஆரியர் சாதியுள் ஆயிரஞ்சாதி வகுப்பவர் வகுத்து மாய்க நீர் அனைவரும் தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம் என்பவை போற்ற எழுந்திடும் வீரச் சாதி யொன்றனையே சார்ந்தோராவீர் ----- மகாகவி பாரதியார் [குரு கோவிந்த சிம்மன் கால்ஸா பந்தை துவக்கி ஆற்றும் வீர உரை] சுபாஷிதம் 2 ப்ராப்யாப தம் நவ்யததே கதாசித் உத்யோகம் அன்விச்சதி சாப்ரமத்தஹ துக்கஞ்ச காலே ச ஹதே மஹாத்மா துரந்த ரஹ்த ஸ்ய ஜிதா ஹ ஸபத் னா ஹ ---விதுரநீதி 1-101 பொருள்: நெருக்கடியைக் கண்டு கலங்க மாட்டான்; கவனம் சிதறாதவனாகவே பணியில் இறங்குவான்; பெருந்தன்மையுடையவனாக, நேர்கிற துன்பத்தைப் பொறுத்துக் கொள்வான் பொறுப்பு ஏற்பான்; இதனால் அவனது எதிரிகள் அவனிடம் தோற்று விடுவர் 5101 பிரமாதி வருடம் ********************************************************************************5101 - ஆனி – 1999
******************************************************************************** சுபாஷிதம் 1 (சத்ரபதி சிவாஜி தன் படைக்குக் கூறியது) தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை மாய்ந்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வ்ய் கொல்? மானமொன் றிலாது மாற்றலர் தொழும்பராய் ஈனமுற் றிருக்க எவங்கொலோ விரும்புவன்? --- பாரதியார் சுபாஷிதம் 2 ஸாமர்த்யமூலம ஸ்வாதந்த்ரயம் ஸ்ரமமூலம் ச வைபவம் ந்யாயமூலம் ஸூராஜ்யம் ஸ்யாத் ஸங்க மூலம் மஹாபலம் சங்ககீதை 37 பொருள்: ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கு அடிப்படை அதன் கெட்டிக்கரத்தனத்தில் உள்ளது. உன்னத நிலைக்கு அடிப்படை உழைப்பாகும். நல்லாட்சிக்கு அடிப்படை நீதி நெறியாகும். பெரும் சக்திக்கு அடிப்படை ஒருங்கிணைப்பு (சங்கம்) ஆகும் 5101 பிரமாதி வருடம் ********************************************************************************5101 - ஆடி – 1999
******************************************************************************** சுபாஷிதம் 1 பேயா யுழலுஞ் சிறுமனமே பேணா யென்சொல் இன்றுமுதல் நீயா யொன்றும் நாடாதே நினது தலைவன் யானேகாண்; தாயாம் சக்தி தாளினிலும் தரும மெனயான் குறிப்பதிலும் ஓயா தேநின் றுழைத்திடுவாய் உரைத்தேன் அடங்கி உய்யுதியால் --- பாரதியார் சுபாஷிதம் 2 மஹா சித்தாந்த நிஷ்டானாம் ஸ்வானுஷாஸன வர்தினாம் | ஸமஷ்டிலீன வ்யஷ்டினாம் ஸங்க ஆதர்ஷ் உஸ்யதே || சங்ககீதை 115 பொருள்: யாருக்கு உயர்ந்த லட்சியப்பற்றும் சுய கட்டுப்பட்டுடன் நடந்து கொள்வதும் சமுதாயத்தில் இரண்டறக் கலந்துவிடுவதும் தன்மையாகியுள்ளதோ அவர்களது ஒருங்கிணைக்கப்பட்ட சக்தி (சங்கம்) முன்னுதரணமாக இருக்கும். 5101 பிரமாதி வருடம் ********************************************************************************5101 - ஆவணி – 1999
********************************************************************************* ஏழ்மை யென்றும் அடிமை யென்றும் எவனும் இல்லை ஜாதியில் இழிவு கொண்ட மனித ரென்பது இந்தி யாவில் இல்லையே; வாழி கல்வி செல்வம் எய்தி மனம கிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒருநி கர் சமானமாக வாழ்வமே! --- பாரதியார் சுபாஷிதம் 2 கிராமஸ்ய ஸேவயானுனம் ஸேவா தேஷ்ஸ்ய ஸித்யதி தேஷஸேவா ஹி தேவஸ்ய ஸேவாத்ர பரமார்தத ஹ ---- கிராம கீதாம்ருதம் 3-27 பொருள்: உண்மையிலேயே கிராமங்களுக்கு செய்யும் சேவையே தேச சேவையாகும். தேசசேவையே உயர்ந்த லட்சியமாகிய இறைவனின் தொண்டாகும் 5101 பிரமாதி வருடம் ********************************************************************************
5101 -- Pramathi
Subscribe to:
Posts (Atom)