5097 -- Yuva


5097 யுவ வருடம்

5097 - சித்திரை – 1995 5097 - வைகாசி – 1995 5097 - ஆனி – 1995 5097 - ஆடி – 1995 5097 - ஆவணி – 1995 5097 - புரட்டாசி – 1995 5097 - ஐப்பசி – 1995 5097 - கார்த்திகை – 1995 5097 - பங்குனி – 1996

*************************************************************************

5097 - சித்திரை – 1995

************************************************************************* சுபாஷிதம் 1 விகாஸயதி ஸத்பாவான் விலோபயதி துர்குணான்! வினாஷயதி வித்வேஷான் கார்யம் ஸங்கடனாத்மகம் பொருள்: நல்ல எண்ணங்களை மலரச் செய்வதும், தீயகுணங்களைக் களைவதும், வெறுப்பை அழிப்பதும் சங்கவேலையின் பலனாகும் சுபாஷிதம் 2 நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொற்கேட்பதுவும் நன்றே – நல்லார் குணங்களுரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கியிருப்பதுவும் நன்றே ------ மூதுரை 5097 யுவ வருடம் ********************************************************************************

5097 - வைகாசி – 1995

************************************************************************* சுபாஷிதம் 1 விஜேதவ்யா லங்கா சரண தரணீயொ ஜலநிதிஹி விபக்ஷஹ் பௌலஸ்த்யோ ரணபுவி ஸஹாயாஷ்ச கபயஹ த்தாப் யே கோ ராமஸ் ஸகலமவ தீத்ராக்ஷஸகுலம் க்ரியா ஸித்திஸ் ஸத்வே பவதி மஹதாம் நோபகரணே|| பொருள்: ஜெயிக்க வேண்டியதோ இலங்கை; கடக்க வேண்டியதோ பெருங்கடல்; எதிரியோ ராவணன்; போர்க்களத்தில் உதவி என்று பார்த்தால் குரங்குகள், இப்படி எல்லாம் இருந்தாலும் ராமன் தனியாக ராக்ஷஸ குலம் முழுவதையும் அழித்தான். (காரணம்) மகான்களுக்கு வேலையில் வெற்றி கருவிகளால் இல்லை; உள்சக்தியினால்தான் சுபாஷிதம் 1 வைகறை யாமம் துயில் எழுந்து தான் செய்யும் நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து, வாய்வதின் தந்தையும் தாயும் தொழுது எழுக என்பதே முந்தையோர் கண்ட முறை ---- ஆசாரக் கோவை 5097 யுவ வருடம் ********************************************************************************

5097 - ஆனி – 1995

******************************************************************************* சுபாஷிதம் 1 பாத்ரேத்யாகீ, குணே ராகீ போகீபரிஜனை ஸ்ஸஹ! ஷாஸ்த்ரே போத்தா ரணே யோத்தா ஸவை புருஷஉச் யதே!! பொருள்: தகுதியுள்ள நல்லவர்களுக்கு தானம் தருபவனும், நற்குணங்கள் உள்ளவனிடம் ஈடுபாடு கொண்டவனும் அருகில் இருப்பவர்களுடன் வசதிகளைப் பகிர்ந்து அனுபவிப்பவனும் நீதிநெறிகளைத் தெரிந்தவனும், போர்க்களத்தில் வீரத்துடன் போராடுபவனுமாகிய ஒருவனைத்தான் ஆண்மகன் என்று சொல்வார்கள். சுபாஷிதம் 2 பாத்துஊண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது குறள் பொருள்: எக்காலத்திலும் பகுத்துக் கொடுத்து உண்ணப் பழகியவர்களை பசி என்னும் தீயநோய் தீண்டுதல் இல்லை 5097 யுவ வருடம் ********************************************************************************

5097 - ஆடி – 1995

************************************************************************* சுபாஷிதம் 1 புராண மித்யேவ நஸாது ஸர்வம் ந சா பி காவ்யம் நவமித் யவத் யம் ! ஸந்த ஹ் பரீக்ஷ்யானய தரத் ப ஜந்தே மூட ஹ் பரப்ரத் யயநேய புத்தி ஹி!! பொருள்: வெறும் பழமையானது என்பதற்காக எல்லாம் நல்லதாக ஆகாது. புதியது என்பதற்காக எந்த ஒரு பொருளும் ஓதுக்கப்பட வேண்டியது ஆகாது. புத்திசாலியான நல்லவர்கள் ஆராய்ந்து பார்த்த பின்புதான் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள். ஆனால் முட்டாள் சுயபுத்தியை பயன்படுத்தாமல் மற்றவர்களின் கருத்தின்படி முடிவுக்கு வருவான் சுபாஷிதம் 2 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு ----- திருக்குறள் பொருள்: யாதொரு பொருளையும் எவரெவர் சொல்லக் கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருளைக் காண்பதே அறிவாகும் 5097 யுவ வருடம் ********************************************************************************

5097 - ஆவணி – 1995

************************************************************************* சுபாஷிதம் 1 ஸர்வே பவந்து ஸுகின: ஸர்வே ஸந்து நிராமயாஹா ஸர்வே பத்ராணி பஸ்யந்து மாகஸ்சித் துக்க பாக்பவேத் பொருள்: எல்லோரும் இன்பமடையட்டும் எல்லோரும் நோய் அற்றவர்களாக இருக்கட்டும் எல்லோரும் மங்களங்களையே அனுபவிக்கட்டும் ஒருவரும் துன்பமடையக் கூடாது சுபாஷிதம் 2 தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துயர்ந்தோர் தம்மை மதியார் தமையடைந்தோர் ---- தம்மின் இழியினும் செல்வர் இடர் நீர்ப்பர் அல்கு கழியினும் செல்லாதோ கடல் ------- நன்னெறி கல்வியில் சிறந்த பெரியோர் தமது உயர்வை தாமே மதித்துக் கொள்வதில்லை. தம்மிலும் தழ்ந்தவரிடமும் சென்று அவரது துன்பத்தைப் போக்கி வருவர். பரந்து விரிந்த கடலிலுள்ள நிரானதுமிகச் சிறிய உப்பங்கழிகளிலும் சென்று தங்கியிருந்து உப்பைக் கொடுக்கின்றதல்லவா, அதுபோல. 5097 யுவ வருடம் ********************************************************************************

5097 - புரட்டாசி – 1995

************************************************************************* சுபாஷிதம் 1 ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம் தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஷ்சய !! ஸ்ரீமத் பகவத்கீதை பொருள்: போரில் மடிந்தால் பொன்னுலகைப் பெற்றிடுவாய். வென்றால் மண்ணுலகை ஆண்டு அனுபவிப்பாய். ஆகையால் கௌந்தேய (அர்ஜுனா) போரின் பொருட்டு உறுதி கொண்டு எழுந்திரு. சுபாஷிதம் 2 எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி வேண்டி னேனுக் கருளினள் காளி தடுத்து நிற்பது டெய்வத மேனும் சாகு மானுட மாயினும் அஃதைப் படுத்து மாய்ப்பன் அருட்பெருங் காளி பாரில் வெற்றி எனக்குறு மாறே ----- மகாகவி பாரதியார் 5097 யுவ வருடம் ********************************************************************************

5097 - ஐப்பசி – 1995

************************************************************************* சுபாஷிதம் 1 வ்யாயாம புஷ்ட காத்ரஸ்ய புத்திஸ்தேஜோ யஷோ பலம்! ப்ரவர்தந்தே மனுஷ்யஸ்ய தஸ்மாத் வ்யாயாமமாசரேத்!! பொருள்: உடற் பயிற்சியால் நல்ல உடம்பை அடைந்தவனின் புத்தியும், தெய்வீக களையும், புகழும், பலமும் வளரும். ஆகவே உடற்பயிற்சி செய்வீர். சுபாஷிதம் 2 தோளை வலியுடைய தாக்கி – உடற் சோர்வும் பிணிபலவும் போக்கி – அரி வாளைக் கொண்டு பிளந்தாலிம் – கட்டு மாறா வுடலுறுதி தந்து – சுடர் நாளைக் கண்ட்தோர் மலர்போல் – ஒளி நண்ணித் திகழுமுகந் தந்து – மத வேளை வெல்லுமுறைகூறித் – தவ மேன்மை கொடுத்தருளல் வேண்டும் மகாகவி பாரதியார் 5097 யுவ வருடம் ********************************************************************************

5097 - கார்த்திகை – 1995

************************************************************************* சுபாஷிதம் 1 ஸர்வதர்ம ஸமாவ்ருத்திஹி ஸர்வ ஜாதி ஸமா மதிஹி ஸர்வ ஸேவாபரா நீதிஹி இதி ஸ்ங்கஸ்ய பத்ததிஹி!! சங்க கீதை பொருள்: எல்லா வசிபாடுகள் பொருட்டும் சமமான அணுகுமுறை. எல்லா ஜாதிகளையும் சமமாகக் கருதுவது, எல்லோருக்கும் சேவை என்பதுதான் சங்கத்தின் முறையாகும் சுபாஷிதம் 2 சமன்செய்து சீர்தூக்கும் கோல்போ லமந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி ---- திருக்குறள் பொருள்: துலாக்கோல் பொருளை வரையறுப்பது போலப் பகை நட்பைப் பார்க்காமல் நடுநிலைமையில் நீதி வழங்குவதே சான்றோர்க்கு அழகு 5097 யுவ வருடம் ********************************************************************************

5097 - பங்குனி – 1996

************************************************************************* சுபாஷிதம் 1 சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! – தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா! தேம்பி யழுங்குழந்தை நொண்டி – நீ திடங்கொண்டு போராடு பாப்பா! --- மகாகவி பாரதியார் சுபாஷிதம் 2 உபகுர்யான்னி ராகா ங் க்ஷோ யஸ்ஸ ஸாது ரிதீர்ய தெ ஸாகாங் க்ஷமுபகுர் யாத்யஹ ஸாதுத்வே தஸ்ய கோ குணஹ ----- ஸ்கந்த புராணம் பொருள்: யார் தனக்காக எதுவும் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்கிறார்களோ அவர்களே நல்லவரெனப்படுகிறார்கள். எதிர்பார்ப்புடன் தொண்டு செய்வதில் என்ன நற்குணமுள்ளது? 5097 யுவ வருடம் ********************************************************************************