5112 விக்ருதி வருடம்
5112 - தை – 2011 5112 - மாசி – 2011 5112 - பங்குனி – 2011
************************************************************************* 5112 - தை – 2011
************************************************************************* சுபாஷிதம் 1 ஏகம் விஷரஸம் ஹந்தி சஸ்த்ரே ணைகச்ச வத்யதே | ஸராஷ்ட்ரம் ஸப்ரஜம் ஹந்தி ராஜானம் மந்த் ரவி ப்ளவ: || பொருள்: நஞ்சானது ஒருசமயத்தில் ஒருவரை மட்டும் அழிக்கும் ஆயுதமானது ஒரே சமயத்தில் பலரை அழிக்க வல்லது. ஆனால் ஒர் அரசனோ அல்லது அவனது மந்திரிகளோ எடுக்கும் ஓர் தவறான முடிவு கூட அந்த நாட்டையோ அல்லது மக்களையோ அழிக்க வல்லது சுபாஷிதம் 2 நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரி வாள் எங்கள் தாய் – அவர் அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின் ஆனந்தக் கூத்தி டுவாள் --- பாரதியார் 5112 விக்ருதி வருடம் ********************************************************************************5112 - மாசி – 2011
************************************************************************* சுபாஷிதம் 1 சிந்தினீயா ஹி விபதாம் ஆதாவேவ ப்ரதிக்ரியா | ந கூபகனனம் யுக்தம் ப்ரதீப்தே வஹ்னினா க்ருஹே || பொருள்: வீடு தீப்பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அதை அணைப்பதற்காக கிணறுத் தோண்டுவது பயனற்றது. மாறாக நாம் முன்யோசனையுடன் இருக்க வேண்டும். அதைப் போலவேப் பிரச்சினைகள் தோன்றுவதற்கு முன்னரே அதை எதிர்க் கொள்ளக் கூடிய வகையில் நாம் முந்தயாரிப்புடன் இருக்க வேண்டும். சுபாஷிதம் 2 பண்டு முளப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமிபோனால் முளையாதாம் – கொண்டபேர் ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி ஏற்ற கருமம் செயல் ----மூதுரை பொருள்: விளையும் நெல்லிருந்து கிடைப்பது அரிசியே ஆனாலும், நெல்லிலிருந்து உமியை நீக்கி விட்டால் மீண்டும் நெற்கதிர் முளைக்காது. அதுபோல நல்ல திறமையானவருக்கு அவரது ஆற்றலுக்கு ஏற்றார்போல் நற்செயல் செய்யாவிட்டால் அந்த திறமையால் பயனேதுமில்லை. 5112 விக்ருதி வருடம் ********************************************************************************5112 - பங்குனி – 2011
********************************************************************************* சுபாஷிதம் 1 ஸாக்ஷரா: விபரீதாச்சேத்ராக்ஷஸா: ஏவ கேவலம் | ஸரஸோ விபரீதச்சேத்ஸரஸத்வம் ந முஞ்சதி || பொருள்: நங்கு படித்தறிந்தவன் கூட சந்தர்ப்பவசத்தால் அரக்கனைப் போல மாறுவான். மாறாக உயர்ந்தப் பண்பாளன் எத்தகைய சூழ்நிலையிலும் தன் இயல்பிலுருந்து மாறமாட்டான் “சாக்ஷ்ரா” எனும் வார்த்தையை மாற்றி எழுதும் போது “ராக்ஷசா” என்று வடிவம் பெறும் மாறாக ஸரஸ எனும் வார்த்தையை மாற்றி எழுதும் போது ஸரஸ என்ற வடிவமே பெறும். சுபாஷிதம் 2 கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி ---- திருக்குறள் பொருள்: நல்வினையால் செழிப்பும், தீவினையால் வறுமையும் அடைதல் எல்லாரிடத்தும் நிகழ்வனவே. அவை காரணமாக மனம் ஒரு பக்கம் சாராமல் நடுநிலையோடு இருத்தலே சான்றோர்க்கு அழகு தரும் பண்பாகும். 5112 விக்ருதி வருடம் ********************************************************************************
5112 -- Vikruthi
Subscribe to:
Posts (Atom)